Advertisement
ஜகர்த்தா: இந்தோனேசியாவில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் நியூசிலாந்து விமான பைலட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட அந்நாட்டு ராணுவத்தினர் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தோனேசியா கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு பப்புவாவில் கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது அரசுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தோனேசியாவிடமிருந்து தங்களுக்கு விடுதலை வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட நாட்களாக வைத்து வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்காக பல்வேறு தீவிர நடவடிக்கைகளை இந்தோனேசிய அரசும் எடுத்து வருகிறது.
இந்தோனேசியாவில் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் நியூசிலாந்து விமான பைலட்டை மீட்க சென்ற ராணுவத்தினர் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement