கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன். உழைப்பவனுக்கு நிலம் சொந்தமாக்கப்பட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்ட காந்தியவாதி. பெரும் பணபலம், அதிகாரபலமுடைய நில உடைமையாளர்களைத் துணிந்து எதிர்த்தவர். களத்தில் நின்று போராடிய அவரைப் பழிவாங்க நிலச்சுவான்தாரர்கள் பலர் காத்துக்கொண்டிருந்தனர். அவற்றை
கணவர் ஜெகந்நாதனோடு அவர் தொடங்கிய எண்ணற்ற சமூகப் பணிகளில் மிக முக்கியமான ஒன்று லாபிட்டி அமைப்பு (Land for the Tillers' Freedom). உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்பதை கொள்கையாகக் கொண்ட அமைப்பு லாபிட்டி. இந்த அமைப்பின் மூலம், 1982 முதல் 1986 வரை சுமார் 175 நிலச்சுவான்தார்களிடம் இருந்து 5,000 ஏக்கர் நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி 5,000 குடும்பங்களுக்கு அளித்தவர். 1981-ல் நாகப்பட்டினம் மாவட்டத்தில், கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ், 19 கிராமங்களில், 1,112 ஏக்கர் நிலத்தை, வங்கிக் கடனில் பெற்று, 1,112 குடும்பங்களுக்குப் பிரித்துக்
பல விருதுகளுக்கு மத்தியில் சமீபத்தில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நந்தினி வெள்ளைச்சாமி