புதுடெல்லி: ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பாக அவர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டுவரும் நிலையில், ராகுல் காந்தி இன்று (மார்ச் 16) நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ளார்.
இதுகுறித்து அக்கட்சியின் எம்.பி., மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பதிவில்,"இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் … அங்கு சந்திக்கலாம் அனுராக் தாக்கூர், ஸ்மிருதி" என்று ராகுல் காந்தியின் படத்தினை பகிர்ந்திருந்தார். ராகுல் காந்தியின் லண்டன் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்த அமைச்சர்களில் தாக்கூரும், ஸ்மிருதியும் முன்னிலையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு தொடர்பாக அவர் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுப்பட்டுவரும் நிலையில், ராகுல் காந்தி இன்று (மார்ச் 16) நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ளார்.
Author: செய்திப்பிரிவு