ஸ்ரீநகர்: "வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையாக போராட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டியது அவசியம். ஆனால் அப்படி நடக்குமா என்பது தெரியவில்லை" என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "காங்கிரஸ் தலைமையில் ஒரு பெரிய எதிர்க்கட்சிகளின் கூட்டணி அமைய வேண்டியது அவசியமாய் இருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சி முகாமில் விரிசல்களை உண்டு பண்ணி அப்படி ஒன்று நடந்து விடாமல் பாஜக கவனமாக பார்த்துக்கொள்கிறது. எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒன்றிணையாத வரை பாஜகவுக்கு வலிமையான எதிர்ப்பு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், எதிர்க்கட்சிகளின் கழுத்தில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வுத்துறைகளின் மூலம் கத்தி வைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நிலையில் அவர்கள் ஒன்றிணைவது சாத்தியமா என்பதும் தெரியவில்லை. அகிலேஷ், மாயாவிதியைப் பாருங்கள் இந்த விஷயத்தில் அவர்கள் எதுவும் பேசாமல் ஏன் மவுனமாக இருக்கிறார்கள்.
“வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலிமையாக போராட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைய வேண்டியது அவசியம்” என்று மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு