Advertisement
புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடின. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து வந்திருந்தனர். மக்களவை கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை கூடிய சில நிமிடங்களிலேயே அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
Author: செய்திப்பிரிவு
Advertisement