புதுடெல்லி: தமிழகத்தில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக கிளம்பிய சர்ச்சைக்கு இரு மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் ஒரு கும்பல் செயல்பட்டது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பிஹாரை சேர்ந்த மணிஷ் காஷ்யப் என்பவர் தன்னை ஒரு சமூக செயற்பாட்டாளர் என கூறிக் கொண்டு தனது யூடியூப் சேனலில் போலி செய்திகளை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். இதன்மூலம் அவருக்கு மாதம் ரூ.5 லட்சம் வரை வருமானம் கிடைத்துள்ளது. வருமானத்தை மேலும் கூட்டுவதற்காக போலியான காட்சிகளை படம் பிடிக்க முடிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக கிளம்பிய சர்ச்சைக்கு இரு மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் பின்னணியில் ஒரு கும்பல் செயல்பட்டது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
Author: ஆர்.ஷபிமுன்னா