திருச்சி: திருச்சி சிவாவை அவரது இல்லத்தில் அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை சந்தித்தார். 15 நிமிடம் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பின்னர் “நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்று இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர்.
கருப்புக் கொடியும் தாக்குதலும்: திருச்சி கன்டோன்மென்ட் ஸ்டேட் ஆபிசர்ஸ் காலனியில் திருச்சி சிவா எம்.பி வீட்டருகே, நமக்கு நாமே திட்டத்தில் கட்டப்பட்ட நவீன இறகுப் பந்து உள்விளையாட்டு அரங்கத்துக்கான கல்வெட்டில் திருச்சி சிவா எம்.பி பெயர் இல்லாததைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கே.என்.நேருவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினர். அதற்கு பதிலாக கே.என்.நேரு ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். மேலும், செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்துக்குள் புகுந்து, அங்கு கைது செய்து வைக்கப்பட்டிருந்த திருச்சி சிவாவின் ஆதரவாளர்களையும் தாக்கினர்.
திருச்சி சிவாவை அவரது இல்லத்தில் அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை சந்தித்தார். 15 நிமிடம் நீடித்த இந்தச் சந்திப்புக்குப் பின்னர் “நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்; நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்” என்று இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர்.
Author: அ.வேலுச்சாமி