சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பணிப் பெண்ணிடமிருந்து, புகாரில் தெரிவிக்கப்பட்டதை விட அதிக நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க காவல்துறை முடிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 பவுன் நகைகள் திருடப்பட்டுவிட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த மாதம் புகார் அளித்தார். அதன்படி, காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட வேலைக்கார பெண்ணிடமிருந்து, புகாரில் தெரிவிக்கப்பட்டதை விட அதிக நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் ஐஸ்வர்யாவிடம் விசாரிக்க காவல் துறை முடிவு செய்துள்ளது. இந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Author: செய்திப்பிரிவு