மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை சூப்பர் ஹீரோ என்றும். அதனால் அவரது ஜெர்ஸிக்கு பிரத்யேக சிறப்பை சென்னை அணி சேர்க்க வேண்டும் என தான் நினைப்பதாகவும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட்டும் செய்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் அரங்கில் 5,000 ரன்களை கடந்த வீரர்களில் ஒருவராக இணைந்துள்ளார் தோனி. நேற்றைய போட்டியில் லக்னோ அணிக்கு எதிராக 2 சிக்ஸர்களை விளாசி இந்த சாதனையை அவர் கடந்தார். அவரது அந்த சிக்ஸர்கள் குறித்து ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை சொல்லி வருகின்றனர். சிலர் லக்னோ அணியின் வெற்றியை தடுத்ததே அந்த 2 சிக்ஸர்கள் தான் எனவும் சொல்லி வருகின்றனர். இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா ட்வீட் மூலம் தோனி குறித்து தனது கருத்தை சொல்லி இருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை சூப்பர் ஹீரோ என்றும். அதனால் அவரது ஜெர்ஸிக்கு பிரத்யேக சிறப்பை சென்னை அணி சேர்க்க வேண்டும் என தான் நினைப்பதாகவும் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்வீட்டும் செய்துள்ளார்.
Authour: செய்திப்பிரிவு