சென்னை: தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க எவ்வித முன் அனுமதியும் தேவையில்லை என்ற அரசின் அறிவிப்பை உடனே செயல்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கு சிறு, குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சங்கத்தின் (டான்ஸ்டியா) தலைவர் கே.மாரியப்பன் அனுப்பியுள்ள கடிதம்: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் வழங்கும் கடனுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு 6 சதவீதம் வட்டி குறைப்பு வழங்கவேண்டும். ரிசர்வ் வங்கி அடிக்கடி ரெப்போ வட்டியை உயர்த்துவதால், எம்எஸ்எம்இ நிறுவனங்கள் கூடுதல் வட்டி கட்ட முடியாமல் அவதிப்படுகின்றன.
தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க எவ்வித முன் அனுமதியும் தேவையில்லை என்ற அரசின் அறிவிப்பை உடனே செயல்படுத்த வேண்டும் என்று முதல்வருக்கு சிறு, குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
Author: செய்திப்பிரிவு