கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பல விநோதமான விஷயங்கள் இடம்பெற்றிருக்கும். நீளமாக நகம், நீளமாக தலைமுடி வளர்ப்பது தொடங்கி அதிகளவில் உணவு உட்கொள்வது வரை பல வேடிக்கைகளுடன் பட்டியல் நீளும். அப்படியொரு சாதனைதான் தூக்கத்தை தவிர்த்து கண்விழித்து இருத்தல். உலகிலேயே அதிக நேரம் கண்விழித்து கின்னஸ் சாதனை புரிந்த நபர் ராபர்ட் மெக் டொனால்ட். ஆனால் இந்தச் சாதனை நடந்து 35 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. இப்படியொரு சாதனையை இனி யாரும் செய்ய முடியாது. ஏனென்றால், கின்னஸ் அமைப்பே தூக்கம் விழிக்கும் செயலை ஒரு சாதனையாக அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துவிட்டது.
இந்நிலையில், 1986-ல் ராபர்ட் பெக்டொனால்டு 19 நாட்கள் கண்விழித்து மேற்கொண்ட சாதனைதான் கடைசி சாதனையாக உள்ளது. அவர் மொத்தம் 453 மணி நேரம் 40 நிமிடங்கள் கண் விழித்திருந்து இந்தச் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். மெக்டொனால்டுக்கு முன்னதாக ஓர் அறிவியல் ஆராய்ச்சிக்காக ரேண்டி கார்ட்னர், ப்ரூஸ் மெக் அலிஸ்டர் என்ற இரண்டு மாணவர்கள் 11 நாட்கள் தூக்கம் விழிக்கும் சாதனையை மேற்கொண்டனர். சில நாட்களிலேயே ப்ரூஸ் விலகிக் கொள்ளம் ரேண்டி மட்டும் மொத்தம் 264 மணி நேரம் அவர்கள் தூங்காமல் இருந்தார்.
கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பல விநோதமான விஷயங்கள் இடம்பெற்றிருக்கும். நீளமாக நகம், நீளமாக தலைமுடி வளர்ப்பது தொடங்கி அதிகளவில் உணவு உட்கொள்வது வரை பல வேடிக்கைகளுடன் பட்டியல் நீளும்.
Authour: செய்திப்பிரிவு