தஞ்சாவூர்: பள்ளியில் படித்த மாணவர்களில் பலர் மாற்றுச்சான்றிதழ் வாங்காமல் ஐடிஐ, பாலிடெக்னிக்கில் சேர்ந்ததால் நிகழாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறும் அமைச்சர் அன்பில் மகேஸ், இதுதொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தலின்போது கூறிவிட்டு, தற்போது பட்ஜெட்டில் தகுதியின் அடிப்படையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தாதது குறித்து மக்களிடமிருந்து கேள்விகள் எழுந்ததைத் தொடர்ந்து, தற்போது இதனை அறிவித்துள்ளனர்.
பள்ளியில் படித்த மாணவர்களில் பலர் மாற்றுச்சான்றிதழ் வாங்காமல் ஐடிஐ, பாலிடெக்னிக்கில் சேர்ந்ததால் நிகழாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறும் அமைச்சர் அன்பில் மகேஸ், இதுதொடர்பான ஆவணங்களை வெளியிட வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு