சென்னை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றுவதாக அதிமுக செயற்குழுவில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில், பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சி செயற்குழு உறுப்பினர்கள் மாநில தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநிலக் கழகச் செயலாளர்கள், கட்சி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் (மகளிர்) என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு மக்களை ஏமாற்றுவதாக அதிமுக செயற்குழுவில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு