புதுடெல்லி: தேசவிரோத சக்திகளுக்கான நிரந்தர கருவியாக ராகுல் காந்தி மாறிவிட்டார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் உறுதி, அதன் வலிமையான ஜனநாயகம் மற்றும் தீர்க்கமான அரசாங்கத்தின் மீது தேச விரோத சக்திகளுக்கு எப்போதுமே பிரச்சினைகள் உண்டு. இந்திய ஜனநாயகத்தை விமர்சித்ததன் மூலமும், இந்திய ஜனநாயகத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்று அந்நிய மண்ணில் தெரிவித்ததன் மூலமும் நம் நாட்டின் இறையாண்மை மீது ராகுல் காந்தி பெரிய தாக்குதல் நடத்தியுள்ளார். இந்திய மக்களால் திரும்ப திரும்ப நிராகரிக்கப்பட்ட ராகுல் காந்தி, இந்தியாவிற்கு எதிரான சக்திகளின் நிரந்தரமான கருவியாக மாறி விட்டார்" என்று தெரிவித்துள்ளார்.
தேசவிரோத சக்திகளுக்கான நிரந்தர கருவியாக ராகுல் காந்தி மாறிவிட்டார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு