தென் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் பஞ்சமி நிலம் இல்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சமி நிலம் அல்லது Depressed Class Land என்பது நிலமற்ற ஏழை பட்டியலின மக்களுக்காக 1892ம் ஆண்டில் ஆங்கிலேய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள். பட்டியலின மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக, ஆங்கிலேயர் அரசாங்கம் மேற்கொண்ட மிக முக்கியமான நடவடிக்கையாக இன்று வரை பார்க்கப்படுகிறது. இத்தகைய பஞ்சமி நிலங்களை பட்டியலின மக்களைத் தவிர இதர சமூகத்தினர் வாங்க முடியாது அப்படியே வாங்கி இருந்தாலும் அது செல்லாது என்கிறது சட்டம். ஆனால், இன்றைக்கு பஞ்சமி நிலம் என்பதே இல்லை என்கிற நிலைமைதான் உள்ளது. பெரும்பான்மை பஞ்சமி நிலங்கள் கைமாற்றப்பட்டுள்ளன. இதனால் நிலமற்ற மக்கள் இன்னும் நிலம் அற்றவர்களாகவே கிடக்கின்றனர் என்ற விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த கருப்பசாமி என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் வாயிலாக,
“விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பஞ்சமிநிலங்கள் பஞ்சமி நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்தற்கான ஆணை நகல், மாவட்டம் வாரியாக பஞ்சமி நிலங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், பரப்பளவு மற்றம் அவை அமைந்துள்ள சர்வே எண்கள் குறித்த தகவல்கள்” கிடைத்துள்ளன.
அத்துடன், பஞ்சமி நிலங்களின் தற்போதைய நிலை குறித்த தகவல்கள், பஞ்சமி நிலங்களை விற்பனை செய்வதற்கான வரைமுறைகள் குறித்த தகவல்கள், ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்கள் குறித்த தகவல்கள், போன்றவை குறித்த தகவலை கேட்டப் பொழுது, மேற்கண்ட மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் எதுவும் இல்லை என்ற தகவலை மாவட்ட நிர்வாகம் கருப்பசாமிக்கு வழங்கியிருப்பது தலித் மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Author: Web Team