தென்காசி: திருநெல்வேலி – தென்காசி நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது இரு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை. இரு மாவட்டங்களை மட்டுமின்றி தமிழகம்- கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கியமான சாலையாகவும் இது விளங்குகிறது.
சுற்றுலாத் தலமான குற்றாலம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களுக்கு வருவோர், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், கேரள மாநிலத்துக்கு தொழில் நிமித்தமாக செல்வோர் என லட்சக்கணக் கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி – தென்காசி நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது இரு மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கை. இரு மாவட்டங்களை மட்டுமின்றி தமிழகம்- கேரள மாநிலத்தை இணைக்கும் முக்கியமான சாலையாகவும் இது விளங்குகிறது.
Author: செய்திப்பிரிவு