தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை என்ற 25 வயதான பெண் யானை உள்ளது. கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் சுவாமி வீதியுலா நேரத்தில் நடைபெறும் ஊர்வலங்கள், சடங்குகளில் இந்த யானை பங்கேற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக யானைக்கு மரு மற்றும் பூஞ்சை போன்ற தோல் சம்பந்தப்பட்ட பாதிப்பு உடலிலும், கால் நகங்களிலும் ஏற்பட்டுள்ளது.
கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், அறங்காவலர் செந்தில்முருகன் முன்னிலையில், கால்நடை மருத்துவர்கள் கலைவாணன் (மதுரை), வினோத்குமார் (திருச்செந்தூர்), பணி ஓய்வுபெற்ற தேனி கால்நடை உதவி இயக்குநர் உமாகாந்தன் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் யானையை நேற்று பரிசோதித்து, யானையின் உடலில் பாதிப்படைந்த பகுதிகளில் இருந்து மாதிரி சேகரித்தனர்.
பரிசோதனை அறிக்கை வந்ததும் தேவையான சிகிச்சை வழங்கப்படும். இந்த பாதிப்புக்கு காரணம் பக்தர்கள் யானைக்கு வழங்கும் உணவு மற்றும் பழங்கள் தான். ஏனென்றால் தற்போது வரக்கூடிய பழங்கள் பூச்சிக்கொல்லி போன்ற ரசாயனங்கள் தெளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
Author: செய்திப்பிரிவு