Advertisement
தூத்துக்குடி: உடன்குடியில் தூய்மைப்பணியாளர் தற்கொலை முயற்சிக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடன்குடி புதுக்காலனியை சேர்ந்தவர் சுடலைமாடன் (55).இவர் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியில் தூய்மைப்பணியாளராக கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தூய்மைப்பணியாளர் சுடலைமாடனை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement