Advertisement
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஒரே நாளில் மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்ட மாணவியின் வீட்டுக்கு மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், வைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
சாத்தான்குளம் வீர இடக்குடித்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி லெட்சுமி. இந்த தம்பதியருக்கு பேச்சித்தாய் என்ற மகளும், ஐயப்பன் என்ற மகனும் உள்ளனர்.
பேச்சித்தாய் பிளஸ் 2, ஐயப்பன் 5-ம் வகுப்பு படிக்கின்றனர். ஆறுமுகம் இறந்துவிட்டதால், லெட்சுமி முறுக்கு வியாபாரம் செய்து இரு குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். இவர்களது வீட்டுக்கு நீண்ட காலமாக மின்சார வசதி இல்லை.
Author: செய்திப்பிரிவு
Advertisement