தூத்துக்குடி: தமிழகத்தில் பனைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டம் தூத்துக்குடி. இம்மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி, குளத்தூர், விளாத்திகுளம் பகுதிகளில் பனைத் தொழில் பிரதானமாக உள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனைத் தொழிலாளர்கள் உள்ளனர்.
ஆண்டுதோறும் மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை, அதாவது பிப்ரவரி மாதம் 15-ம் தேதிக்கு மேல் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வரை பதநீர் சீசனாகும். இந்த ஆண்டும் வழக்கம் போல் பதநீர் சீசன் தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போன நிலையிலும், பதநீர் உற்பத்தியில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. பதநீர் உற்பத்தி நன்றாக இருப்பதால் பனைத் தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பனைத் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டம் தூத்துக்குடி. இம்மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், சாத்தான்குளம், உடன்குடி, குளத்தூர், விளாத்திகுளம் பகுதிகளில் பனைத் தொழில் பிரதானமாக உள்ளது.
Author: செய்திப்பிரிவு