2023-ம் ஆண்டுக்கான `உலக தூக்க தினம்’ இன்று (மார்ச் 17) கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடும் விதமாகத் தன் ஊழியர்களுக்கு, தூங்குவதற்காக ஒரு நிறுவனம் விடுமுறை அளித்து கவனம் பெற்றுள்ளது.

பெங்களூருவை தளமாகக் கொண்ட `Wakefit’ என்ற நிறுவனம் ஃபர்னிச்சர் மற்றும் மெத்தைகளை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தன் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் மெயில் ஒன்றை அனுப்பி உள்ளது.
அதில், `சர்வதேச தூக்க தினத்தை மார்ச் 17 வெள்ளிக்கிழமை அன்று, வேக்ஃபிட் கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறது.
இந்த நாளை, ஊழியர்கள் விருப்ப விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம். தூக்க ஆர்வலராகச் செயல்பட்டு வரும் நாம், தூக்க தினத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். முக்கியமாக இந்த தினம் வெள்ளிக்கிழமையில் வந்தாலும் கொண்டாட வேண்டும். மற்ற விடுமுறைகளைப் போல இந்த விடுமுறையையும் நீங்கள் பெறலாம்’ எனத் தெரிவித்துள்ளது.
ஊழியர்கள் பலரும் இந்த மெயிலை தங்களுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். நிறுவனத்தின் இந்த அறிவிப்பிற்குப் பலரும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
How thoughtful! @wakefit.co to offer us the #GiftOfSleep on World Sleep Day! <3#HappyEmployee #SleepHoliday #Wakefit #InternationalSleepDay pic.twitter.com/PsUf9UZsUK
— Rubinder Kaur (@29_kaur) March 15, 2023
இதுமட்டுமல்லாமல் கடந்த வருடம் வேக்ஃபிட் நிறுவனத்தின் துணை நிறுவனரான சைதன்யா ராமலிங்ககவுடா, நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2 – 2.30 மணி வரை மதிய நேரத்தில் குட்டித் தூக்கம் தூங்க அனுமதி அளிப்பதாக அறிவித்து இருந்தார். நாசா மற்றும் ஹார்வர்டின் ஆய்வுகளைச் சுட்டிக்காட்டி மதிய நேரத் தூக்கம் நினைவாற்றல், படைப்பாற்றல் மற்றும் உற்பத்தித் திறனுக்கு உதவுகிறது எனக் குறிப்பிட்டு இருந்தார்.
Author: இ.நிவேதா