Advertisement
அங்காரா: துருக்கியில் நேற்று புதிதாக ஏற்பட்ட பூகம்பத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
சிரியாவை ஒட்டிய துருக்கி பகுதியில் கடந்த 6ம் தேதி மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.8 ஆக பதிவாகி இருந்தது. இந்த பூகம்பத்தில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்நிலையில், முன்பு பூகம்பம் நேரிட்ட அதே ஹாடே மாகாணத்தில் நேற்று மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இது 6.4 ஆக பதிவாகி உள்ளது. இதையடுத்து 5.8 என்ற அளவில் மற்றொரு நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
துருக்கியில் நேற்று புதிதாக ஏற்பட்ட பூகம்பத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
Author: செய்திப்பிரிவு
Advertisement