கும்பகோணம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
கும்பகோணம் திருவிடைமருதூர் வட்டங்களில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. கோடை காலம் தொடங்கியுள்ளதையொட்டி அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்க அறிவுறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று காலை மடத்துத் தெருவில் மாநகர சார்பில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பந்தலை முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஆர்.காமராஜ் திறந்து வைத்து, பழங்கள், இளநீர், நீர் மோர்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
Author: சி.எஸ். ஆறுமுகம்