திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 17 கி.மீ. தூரத்துக்கு சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை (என். எச். 205) அமைக்கும் பணியை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச். 205) திருநின்றவூர் – ரேணிகுண்டா வரை, 124 கி.மீ. தூரம் ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. இப்பணியில் ஆந்திர மாநிலம், புத்தூர் – ரேணிகுண்டா வரை, நான்கு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, திருவள்ளூர் – புத்தூர் வரை இருவழிச் சாலையாக மாற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 17 கி.மீ. தூரத்துக்கு சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை (என். எச். 205) அமைக்கும் பணியை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
Author: செய்திப்பிரிவு