சென்னை: "திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இதய நோய் சிகிச்சைக்கான ஒரு சிறப்பு பிரிவை வரும் நிதியாண்டில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது: "தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 2,286 இருக்கின்றன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டுதான் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலை ஏற்று, ஒன்றிய அரசு 25 ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை ஒரே ஆண்டில் தந்திருக்கிறது.
திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இருதய நோய் சிகிச்சைக்கான ஒரு சிறப்பு பிரிவை வரும் நிதியாண்டில் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு