`திருமண உறவில் நான் தோற்றுவிட்டேன், மீண்டும் மணக்க விரும்பினால்…' – மனம் திறந்த ஷிகர் தவான்!

14

இந்திய கிரிக்கெட் வீரரான ஷிகர் தவான், ஆயிஷா முகர்ஜியை 2012 அக்டோபர் மாதம் கரம் பிடித்தார். திருமணமாகி 8 வருடங்களான நிலையில், இந்த ஜோடி தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தங்களுடைய பிரிவு குறித்து பொது வெளியில் இவர்கள் வெளியே பகிரவில்லை.

ஷிகர் தவான் – ஆயிஷா முகர்ஜி

இந்நிலையில் தவான் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில், தங்களுடைய பிரிவு குறித்து மனம் திறந்திருக்கிறார். அந்த நிகழ்வில், “நான் திருமண உறவில் தோற்றுவிட்டேன்; இதற்காகப் பிறரை கைகாட்ட விரும்பவில்லை; ஏனெனில் இது என்னுடைய முடிவு.  

அந்த பீல்டு (field) குறித்து நான் அறியாததால், தோல்வியடைந்தேன். இன்று நான் கிரிக்கெட் குறித்துப் பேசும் விஷயங்களை 20 வருடங்களுக்கு முன்பு அறிந்திருக்க மாட்டேன். இது அனுபவத்தால் வருகிறது.

இப்போது என்னுடைய விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. நாளை நான் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதில் மிகவும் புத்திசாலியாக இருப்பேன். எனக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்பதை நான் அறிவேன். எனக்கு 26 – 27 வயது இருந்தபோது, நான் மகிழ்ச்சியாகத் தொடர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தேன். எந்த உறவிலும் இல்லை. 

ஷிகர் தவான்! 

இளைஞர்கள் உறவில் இருக்கும்போது, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள பார்ட்னரின் இருப்பை அனுபவிக்க வேண்டும். இதுதான் முக்கியம். உணர்ச்சிவசப்பட்டு அவசரப்பட்டு திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அந்த நபருடன் ஓரிரு வருடங்கள் செலவழித்து, உங்கள் கலாசாரம் பொருந்திப் போகிறதா, ஒருவரோடு ஒருவர் இருக்கும் நேரங்களை நீங்கள் ரசிக்கிறீர்களா என்பதையும் பாருங்கள்.

இதுவும் ஒரு போட்டியைப் போன்றது. சிலருக்கு 4 – 5 உறவுகள் தேவைப்படலாம். மற்றவர்களுக்கு 8 – 9 வரை கூட ஆகலாம். அதில் ஒன்றும் தவறில்லை. இதிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். நீங்கள் திருமணம் குறித்து முடிவெடுக்கும்போது, உங்களுக்குக் கொஞ்சம் அனுபவம் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.  

 

Author: இ.நிவேதா

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.