திருமண்டங்குடி: திருமண்டங்குடியில் 114-வது நாளாகக் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார். சர்க்கரை ஆலை முறைகேடாக விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.300 கோடி முழுவதையும் திரும்பச் செலுத்தி, விவசாயிகளை சிபில் ஸ்கோர் பிரச்சினையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆலையைத் தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் சர்க்கரை ஆலை முன்பு கடந்த நவ.30-ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருமண்டங்குடியில் 114-வது நாளாகக் கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Author: சி.எஸ். ஆறுமுகம்