திருப்பூர் மாவட்டத்தில் கரோனா பாதித்த முதியவர் உயிரிழப்பு

15

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். அவரது மனைவி கரோனா தொற்றுக்கு ஆளாகி, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கரோனா தொற்று பல்வேறு நாடுகளை முடக்கியது. உலக நாடுகள் போட்டிப்போட்டு தடுப்பூசி கண்டுபிடித்த பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்தியாவில் கரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரித்து வருகிறது. தமிழகத்திலும் கரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், அரசு மருத்துவமனைகள் மற்றும் திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். அவரது மனைவி கரோனா தொற்றுக்கு ஆளாகி, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Author: இரா.கார்த்திகேயன்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.