சென்னை: திருநீர்மலை நைனா ஏரியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை இரு வாரங்களில் அகற்ற தாம்பரம் மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலரான உதயக்குமார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு முக்கியகுடிநீர் ஆதாரமாக நைனா ஏரிஉள்ளது. இந்த ஏரியை தனியார் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்து கட்டுமானங்களை எழுப்பியுள்ளன. கட்டுமானக் கழிவுகளை ஏரியில் கொட்டுவதால் ஏரியின் நீர் ஆதாரமும் பாழாகி வருகிறது.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட திருநீர்மலை மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளுக்கு முக்கியகுடிநீர் ஆதாரமாக நைனா ஏரிஉள்ளது. இந்த ஏரியை தனியார் தொழிற்சாலைகள் ஆக்கிரமித்து கட்டுமானங்களை எழுப்பியுள்ளன.
Author: செய்திப்பிரிவு