Advertisement
புதுச்சேரி: திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘உலகப் பொதுமறையாம் திருக்குறள் நமது நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க அனைத்து தகுதிகளையும் கொண்ட ஓர் அற்புத நூல். 14 ஐரோப்பிய மொழிகளிலும், 10 ஆசிய மொழிகளிலும், 14 இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்ட ஓர் உன்னத நூல். அதுமட்டுமல்லாமல் இந்த நூல் எந்த மதத்துக்கும், எந்த கடவுளுக்கும் கட்டுக்குள் அடங்காத அனைவருக்கும் போதுவான எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஓர் சிறந்த மறைநூல்.
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Author: அ.முன்னடியான்
Advertisement