“டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்படுவேன். கூடிய விரைவில் சசிகலாவைச் சந்திப்பேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை செல்வதற்காக நேற்று இரவு மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
“டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்படுவீர்களா?” என்ற கேள்விக்கு,
“வாய்ப்பிருந்தால் உறுதியாக டி.டி.வி.தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்” என்றவரிடம்,

“சசிகலாவை எப்போது சந்திப்பீர்கள்?” என்றதற்கு,
“கூடிய விரைவில் சசிகலாவைச் சந்திப்பேன்” என்றார்.
தொடர்ந்து, “எடப்பாடி நடத்திய பொதுக்குழு ஆரம்பத்திலிருந்து இன்றுவரை சட்ட நியதிக்கு புறம்பாகவே நடைபெற்றுவருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்” என்றவரிடம், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு, “மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம்” என்றார்.

“முன்னாள் அமைச்சர்கள் பரபரப்பாகப் பேட்டி தருகிறார்களே” என்ற கேள்விக்கு, நேரடியாக பதில் அளிக்காமல் சென்றார்.
Author: செ.சல்மான் பாரிஸ்