தாய், மகள், மருமகள்… ஒரே வீட்டில் மூன்று பெண்களிடம் சாட்டிங் செய்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ!

6

இளம் பெண்களிடம் ஆபாச சாட்டிங்கில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ(29) கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரைக் கைதுசெய்த அன்று சைபர் கிரைம் போலீஸார் நடத்திய விசாரணையில், காதலித்த பெண்ணை கரம்பிடிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பாதிரியார் பணியை விட்டுவிட்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட ஆசைப்பட்டதாகவும் கூறியதாக தகவல் வெளியானது. அதே சமயம் பாதிரியாரின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். பாதிரியார் பல பெண்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்த போட்டோக்கள் லேப்டாப்பில் இருந்திருக்கின்றன. பாதிரியாரின் லேப்டாப்பில் இருக்கும் பெண்கள் குறித்தும், அவர் வாட்ஸ்அப் சாட்டிங்கில் தொடர்புடைய பெண்கள் குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ

பாதிரியாரின் லேப்டாப்பில் இருக்கும் பெண்களில் கல்லூரி மாணவிகள் முதல் திருமணம் ஆன பெண்கள் வரை இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஒரே வீட்டில் வசிக்கும் தாய், மகள், மருமகள் என மூவரிடமும் தனித்தனியாக சாட்டிங்கில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அந்த மூன்று பெண்களுக்கும் மாறி மாறி தெரியாத அளவுக்கு ரகசியமாக சாட்டிங் செய்திருக்கிறார் பாதிரியார். அதுமட்டுமல்லாது ஒரு வீட்டிலுள்ள அக்காள், தங்கை ஆகியோருக்கும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி வளைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறதாம். இந்த நிலையில், பாதிரியாரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸார் முடிவுசெய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ

இது குறித்து குமரி எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் கூறுகையில், “பங்குத்தந்தை பெனடிக்ட் ஆன்றோ சைபர் கிரைம் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான விசாரணை நடைபெற்றுவருகிறது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். வழக்கு விசாரணைக்கு தேவைப்பட்டால் பாதிரியாரை காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதிரியாரின் ஆபாசப் படங்களை வெளியிட்டவர்கள்மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டுவருகிறது. பெண்களின் ஆபாசப் படங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும்” என்றார்.

 

Author: சிந்து ஆர்

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.