உலகளவில் 7 லட்சம் பேர் ஓர் ஆண்டில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கு உலகில் ஒரு தற்கொலை நடக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. உலகளவில் தற்கொலைகள் அதிகரிப்பதன் தீவிரத்தை உணர்ந்து, அதனை பொது சுகாதார பிரச்சினையாகவே உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், தற்கொலைக்கான தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்குவது அவசியமாகிறது.
நம்மில் பலர் தற்கொலை செய்திகளை படிக்கும்போதெல்லாம் ‘இதற்காகவா தற்கொலை பண்ணிப்பாங்க?’, ‘கோழைத்தனம்’ என்று கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஏனெனில், நமது சமூக அமைப்பில் தற்கொலை என்பது முற்றிலும் ஏற்றுக் கொள்ளமுடியாத மன்னிக்க முடியாத குற்றமாக பார்க்கப்படுகிறது. இதன்பொருட்டே நாம் தற்கொலைகளை செய்திகளை அணுகுவதால், அவற்றின் உளவியல் சிக்கல் புரிந்துகொள்ள முடியாத நிலையில் தொடர்ந்து இருக்கிறோம்.
உலகளவில் ஒரு ஆண்டில் 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகிறது.
Authour: இந்து குணசேகர்