தருமபுரி: தருமபுரியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வளாகத்தில், நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணாவை வைத்துக்கொண்டே நிகழ்ச்சி தொகுப்பாளர் ரஜினிகாந்தை கலாய்த்து தள்ளியது கலகலப்பாகவும் சலசலப்பாகவும் அமைந்தது.
தருமபுரி அடுத்த சோகத்தூர் ஊராட்சியில் உள்ள ஏ.ரெட்டிஅள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீசக்தி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி இன்று (வியாழன்) காலை முதல் சோகத்தூர் டிஎன்சி மைதானத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்து வருகிறது. வீரத்தமிழன் ஜல்லிக்கட்டு பேரவை என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றுள்ளன. அதேபோல, 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
தருமபுரியில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வளாகத்தில், நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்தியநாராயணாவை வைத்துக்கொண்டே நிகழ்ச்சி தொகுப்பாளர் ரஜினிகாந்தை கலாய்த்து தள்ளியது கலகலப்பாகவும் சலசலப்பாகவும் அமைந்தது.
Author: எஸ்.ராஜா செல்லம்