Advertisement
டெல்லி: தமிழ்நாட்டின் நிதிநிலைமை படிப்படியாக சீரடைந்து வருகிறது; புதிதாக கடன் வாங்க தேவையில்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் ஒன்றிய அரசின் நிதி பங்கீடு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. ஒன்றிய அரசின் நிதிபங்கீடு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.25,000 கோடி குறைந்துள்ளது. அதானி குழும பங்குகள் சரிவால் குறு, சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
Advertisement