மதுரை: “உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க, ஒருவேளை அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவைப்படலாம்” என்று மதுரை நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கூடுதல் கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று பேசியது: "நீதித் துறைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது. பல மாநிலங்களில் காற்றோட்டமே இல்லாத அறைகளில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் பணிபுரிகின்றனர். பெண்களுக்கு நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் இருப்பதில்லை. கழிப்பறை சரியாக இருப்பதில்லை. இதனால் நீதிமன்றத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
“உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க, ஒருவேளை அரசியலமைப்பு சட்டத் திருத்தம் தேவைப்படலாம்” என்று மதுரை நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
Author: கி.மகாராஜன்