தமிழை மட்டுமே நம்பி வளர விரும்புகிறேன் என்று கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் பேசினார். கோவை நன்னெறிக் கழகம் சார்பில் ‘சிவம் 50’ என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி கிக்கானி பள்ளி வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் பட்டிமன்ற பேச்சாளர்கள் மோகனசுந்தரம், ராஜாராம் ஆகியோர் சுகி சிவத்தை பாராட்டி பேசினர். நிறைவில், சுகிசிவம் பேசியதாவது:
வாழும் காலத்திலேயே நான் மேற்கொண்டுள்ள பணிக்கு என்னை பாராட்டி கொண்டாடி மகிழ்கிறீர்கள். பாரதி ஆசைப்பட்டது போல எனக்கு நடந்துள்ளது எல்லையற்ற மகிழ்ச்சி. பணம், பதவி, புகழுக்கு ஆசைப்படுபவன் அல்ல. எப்போதும் சுதந்திரமாக இருக்கவே விரும்புவேன். தமிழை மட்டுமே நம்பி வளர விரும்புகிறேன்.
தமிழை மட்டுமே நம்பி வளர விரும்புகிறேன் என்று கோவையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆன்மிக சொற்பொழிவாளர் சுகி சிவம் பேசினார்
Authour: செய்திப்பிரிவு