இந்தியாவில் கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்றபல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி கடந்த ஜனவரி மாதம் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 6 பேருக்கு பத்மவிபூஷண் விருதும் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் தமிழகத்தைச் சேர்ந்த இருளர் வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்த இவர்கள்,உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விஷமிக்க பாம்புகளை பிடித்துள்ளனர்.
இந்தியாவில் கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்றபல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன
Author: செய்திப்பிரிவு