திருநெல்வேலி: தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தில் சூரிய சக்தியில் இயங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும் 2 நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த இரு வாகனங்களில் சூரிய சக்தியுடன் இயங்க கூடிய சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனங்களை திருநெல்வேலி மாவட்ட‌ காவல் கண்காணிப்பாளர்‌ ப.சரவணன் நேற்று பார்வையிட்டார்.
தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தில் சூரிய சக்தியில் இயங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு