சென்னை: மார்ச் 17 முதல் 19-ம் தேதி வரை, தமிழகத்தில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள், மின்னல் தாக்கத்தின்போது திறந்தவெளியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ்நாடு வட உள்பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 17.03.2023 முதல் 19.03.2023 வரை, தமிழக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொது மக்கள், மின்னல் தாக்கத்தின் போது திறந்தவெளியில் நிற்பதைத் தவிர்க்க வேண்டும், என்று தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை கேட்டுக்கொண்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு