புதுடெல்லி: இந்தியாவின் மிக முக்கியத் திட்டமான மண் ஆரோக்கிய திட்டம் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகிறது என மக்களவையில் திமுக எம்.பி செந்தில்குமார் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, மத்திய வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் நரேந்தர் சிங் தோமர் விளக்கமாகப் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பியான செந்தில்குமார் இன்று மக்களவையில் எழுப்பியக் கேள்வியில், ''இந்தியாவின் மிக முக்கியமான மண் ஆரோக்கிய திட்டம் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகிறது? இது, செயல்படுத்தப்படுகிறது என்றால் தமிழ்நாட்டில் எத்தனை விவசாயிகளுக்கு மண் ஆரோக்கியத் திட்டத்திற்கான அட்டை வழங்கப்பட்டுள்ளது? குறிப்பாக மண் ஆரோக்கியத் திட்டம் செயல்படுத்தப்பட்ட நோக்கத்தினை மத்திய அரசு அடைந்துள்ளதா? இத்திட்டம் துவங்கப்பட்டு அதில் மத்திய அரசு எதிர்கொள்ளும் சவால்கள் என்ன மேலும் முக்கியமாக விவசாயிகளுக்கு தேவையான மண் பரிசோதனை நிலையங்களை இந்தியாவில் அமைத்துள்ளதா? அதற்குரியப் பலன்களை விவசாயிகள் பெறுகிறார்களா?” எனக் கேட்டிருந்தார்.
இந்தியாவின் மிக முக்கியத் திட்டமான மண் ஆரோக்கிய திட்டம் தமிழகத்தில் எவ்வாறு செயல்படுகிறது? என மக்களவையில் திமுக எம்.பி டாக்டர். டிஎன்வி.எஸ்.செந்தில்குமார் கேள்வி எழுப்பி இருந்தார்.
Author: ஆர்.ஷபிமுன்னா