Advertisement
சென்னை: திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் ஆளும் கட்சியினரே வன்முறையில் ஈடுபடுவது என்பதுவேலியே பயிரை மேய்வதற்குச் சமம். இதிலிருந்து தமிழ்நாட்டில்சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை, மாறாக சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் திமுகவினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், தமிழகத்தில் சட்ட விரோதிகளின் ஆட்சி நடைபெறுகிறது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement