சென்னை: "தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தமாகா சார்பில் வரவேற்கிறேன். மசோதாவானது ஆளுநரின் ஒப்புதலுக்கு உட்பட்டு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு முழுமையான தடை ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு முழுமையான தடை ஏற்பட வேண்டும் என்ற தமிழக மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும். காரணம் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் மாணவர்கள், இளைஞர்கள், முதியோர் என பல தரப்பினரின் வாழ்வானது சீரழிகிறது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவானது ஆளுநரின் ஒப்புதலுக்கு உட்பட்டு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு முழுமையான தடை ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு