மதுரை: தமிழகத்தில் அதிமுக உயிர் வாழ போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் கருத்து தெரிவித்தார்.
மதுரையில் நடந்த காங்கிரஸ் கட்சி விழா ஒன்றில் பங்கேற்க தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது. “சாதி வாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் கட்சியும் ஆதரிக்கிறது. அதிகாரப் பங்கீடு என்பது இன்னும் குறிப்பிட்ட சாதியினருக்கு கிடைக்கவில்லை. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுக்கு பிறகும் உயர்கல்வி நிறங்களான ஐ.ஐ.டி , ஐ.ஐ.எம் போன்ற கல்வி நிறுவனங்களில் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்றகளிலும் இன்னும் அந்தந்த மக்கள் விகிதச்சாரத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்பது உண்மை. அத்தகைய மக்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்க தரவுகள் வேண்டும் என்கிற நிலைப்பாட்டிற்காகவே சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறோம்.
தமிழகத்தில் அதிமுக உயிர் வாழ போராடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ் கருத்து தெரிவித்தார்.
Author: என். சன்னாசி