சென்னை: ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று (ஆர்சி) போன்றவற்றை தபால் மூலமாக மூலமாக விநியோகிக்க தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக போக்குவரத்துத் துறையின் கீழ் வழங்கப்படும் சேவைகளை முடிந்த வரையில்இணைய வழியில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், ஓட்டுநர் உரிம முகவரி மாற்றம் உள்ளிட்ட 6 சேவைகள் இணையவழியில் பெறும் வகையில் போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்துள்ளது. இத்துடன் மேலும் 42 சேவைகளை இணையவழியில் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்று (ஆர்சி) போன்றவற்றை தபால் மூலமாக மூலமாக விநியோகிக்க தமிழக போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
Author: செய்திப்பிரிவு