புதுடெல்லி: தன்பாலின திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கோரி தொடரப்பட்டுள்ள வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது இயற்றப்பட்ட 377-வது சட்டப் பிரிவின்படி தன்பாலின உறவு குற்றமாகக் கருதப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இறுதியாக ‘‘தன்பாலின உறவு குற்றமல்ல’’ என்று கடந்த 2018-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற கடந்த ஜனவரி 6-ம் தேதி உத்தரவிடப்பட்டது.
தன்பாலின திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கோரி தொடரப்பட்டுள்ள வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு