புதுடெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டுமா என்பதை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என்றும், நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதன் விவரம்: ''தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று கோருவது நகர்ப்புற மேல்தட்டுப் பார்வை.
ஓரே பாலினத்தவரின் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கொடுக்க வேண்டுமா என்பதை நாடாளுமன்றத்திடம் விட்டுவிட வேண்டும் என்றும் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது என்றும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு