புதுடெல்லி: தன்பாலினத்தவர் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்கிறது.
தன்பாலினத்தவர் அதாவது ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதை சட்டப்படி அங்கீகரிக்க வேண்டும் என கோரி பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் எஸ்கே கவுல், எஸ் ரவீந்திர பட், பிஎஸ் நரசிம்மா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது.
தன்பாலினத்தவர் திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்கிறது.
Author: செய்திப்பிரிவு