ராமேசுவரம்: தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு நீந்தி சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி பாக் ஜலசந்தி கடற்பகுதியை கடந்த முதல் பெண் என்ற என்ற சாதனையை பெங்களூரைச் சேர்ந்த சுஜேத்தா தேப் பர்மன் (40) படைத்துள்ளார்.
பாக் ஜலசந்தி கடற்பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேசுவரம் தீவும், அதனை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதியும் இதுவே ஆகும்.
தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு நீந்தி சென்று மீண்டும் தனுஷ்கோடிக்கு நீந்தி பாக் ஜலசந்தி கடற்பகுதியை கடந்த முதல் பெண் என்ற என்ற சாதனையை பெங்களுரைச் சேர்ந்த சுஜேத்தா தேப் பர்மன் (40) படைத்துள்ளார்.
Author: எஸ். முஹம்மது ராஃபி