சான் பிரான்சிஸ்கோ: தங்களது மூன்றாவது பெண் குழந்தையை பூமிக்கு வரவேற்றுள்ளனர் மார்க் ஸூகர்பெர்க் – பிரிசில்லா சான் தம்பதியர். இந்த குழந்தைக்கு ஆரேலியா (Aurelia) சான் ஸூகர்பெர்க் என பெயர் சூட்டியுள்ளனர். ஏற்கனவே மாக்சிமா (2015), ஆகஸ்ட் (2017) என இரண்டு பெண் குழந்தைகள் இந்த தம்பதியருக்கு உள்ளனர்.
கடந்த 2003 முதல் டேட் செய்து வந்த மார்க் ஸூகர்பெர்க் மற்றும் சான் இணையர் 2012-ல் மண வாழக்கையில் இணைந்தனர். பிரிசில்லா சான், மார்க் ஸூகர்பெர்க் உடன் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் படித்த சக மாணவி.
தங்களது மூன்றாவது பெண் குழந்தையை பூமிக்கு வரவேற்றுள்ளனர் மார்க் ஸூகர்பெர்க் – பிரிசில்லா சான் தம்பதியர். இந்த குழந்தைக்கு ஆரேலியா (Aurelia) சான் ஸூகர்பெர்க் என பெயர் சூட்டியுள்ளனர். ஏற்கனவே மாக்சிமா (2015), ஆகஸ்ட் (2017) என இரண்டு பெண் குழந்தைகள் இந்த தம்பதியருக்கு உள்ளனர்.
Authour: செய்திப்பிரிவு